Latest News

0

மேஷம்
மேஷம்: உங்கள் சமயோஜித புத்தியால் எல்லா பிரச்னை களையும் எளிதாக சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: யதார்த்தமாக பேசி கவர்வீர்கள். பிள்ளைகளின் எண்ணஓட்டமறிந்து அதற் கேற்ப வழி நடத்துவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.

மிதுனம்
மிதுனம்: கடந்த 2 நாட்களாக உங்கள் குடும்பத்தில் இருந்து வந்த சலசலப்புகள் நீங்கும். பணவரவு திருப்தி தரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் உங்களுக்கு வர வேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மனசாட்சிப்படி செயல்படும் நாள்.

கடகம்
கடகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். குடும்பத்தில் ஒருவரை மாற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.

சிம்மம்
சிம்மம்: தன் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி
கன்னி: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. அரசு காரியங்கள் விரைந்து முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர். உத்யோகத்தில் சில புதுமைகளை செய்து அனைவரது கவனத் தையும் ஈர்ப்பீர். அமோகமான நாள்.

துலாம்
துலாம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளை குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: பிரியமானவர் களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு
தனுசு: தன்னிச்சையாக சில முக்கிய முடிவு எடுப்பீர்கள். உடன்பிறந்தோரின் பிரச்னை யை தீர்த்து வைப்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவர். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். தைரியம் கூடும் நாள்.

மகரம்
மகரம்: கடந்த 2 நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலித மாகும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். மனநிறைவு கிட்டும் நாள்.

கும்பம்
கும்பம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். போராட்டமான நாள்.

மீனம்
மீனம்: எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். பிள்ளை களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். அநாவசியச் செலவுகளை தவிர்க்கப்பாருங்கள். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத் தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உ ழைக்க வேண்டிய நாள்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top