0
மேஷம்
மேஷம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். உங்களால் மற்றவர் கள் ஆதாய மடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர் கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

ரிஷபம்
ரிஷபம்: கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மிதுனம்
மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். மற்றவர்களை சார்ந்து இருக்க வேண்டாம். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

கடகம்
கடகம்: சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

சிம்மம்
சிம்மம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டு வார்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

கன்னி
கன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

துலாம்
துலாம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

விருச்சிகம்
விருச்சிகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து நீங்கும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத் தில் பழைய சரக்குகளை போராடி விற்க வேண்டி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் அளவாக பழகுங்கள். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.

தனுசு
தனுசு: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்கு வீர்கள். சகோதரங்களால் பயனடைவீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோ கத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப் படும். திறமைகள் வெளிப்படும் நாள்.

மகரம்
மகரம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். விருந் தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும் சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர் கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலை யாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.

கும்பம்
கும்பம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந் துக் கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

மீனம்
மீனம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாய்வழி உறவினர் களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில்  லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top