0
2012ஆம் ஆண்டு சிரியாவில் காணாமல் போன அமெரிக்க ஊடகவியலாளரான ஜேம்ஸ் போலி போராளியொருவரால் தலையை வெட்டு படுகொலை செய்யப்படுவதை வெளிப்படுத்தும் வீடியோ காட்சியொன்றை 'ஐ.எஸ்' போராளிகள் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

ஈராக்கில் அமெரிக்க வான் தாக்குதல்களால் தமது போராளிகள் உயிரிழந்துள்ளமைக்கு பழிதீர்க்கும் முகமாகவே இந்த படுகொலையை மேற்கொண்டுள்ளதாக 'ஐ.எஸ்.' போராளிகள் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கான செய்தி என்ற மேற்படி வீடியோ காட்சியில் பாலைவனம் போன்ற இடத்தில் கறுப்பு ஆடை அணிந்த ஆயுததாரியொருவரின் அருகில் ஜேம்ஸ் போலி மண்டியிட்டு அமர்ந்திருக்கிறார்.



இதன்போது ஈராக்கிலான அமெரிக்க குண்டுத் தாக்குதல்களுக்கே தான் கொல்லப்படவுள்ளதாக ஜேம்ஸ் போலி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவரருகே முகமூடி அணிந்து காணப்பட்ட 'ஐ.எஸ்.' போராளி குழு உறுப்பினர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நபர், தனது கையிலிருந்த கத்தியால் தன்னருகே மண்டியிட்டிருந்த ஜேம்ஸ் போலி எனும் நபரின் கழுத்தை வெட்டுவதை அந்த வீடியோ காட்சி வெளிப்படுத்துகிறது.

அந்த வீடியோ காட்சியின் இறுதியில் போராளிகளால் பிடிக்கப்பட்டுள்ள பிறிதொரு அமெரிக்க ஊடகவியலாளரான ஸ்டீவன் ஸொட்லொப்பின் புகைப்படம் காட்சிப்படுத்தப்பட்டு அவரது தலைவிதி அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் அடுத்த நடவடிக்கையிலேயே தங்கியுள்ளது என எச்சரிக்கை காட்சிப்படுத்தப்பட்டது.

ஸ்டீவன் ஸொட்லொப் ஒரு வருடத்திற்கு முன் வட சிரியாவில் வைத்து கடத்தப்பட்டார்.

இந்நிலையில் மேற்படி வீடியோ காட்சிக்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜேம்ஸ் போலியின் மரணம் தொடர்பில் அவரது தாயார் டியனி பேஸ்புக் இணையத்தளத்தில் வெளியிட்ட செய்தியில் சிரிய மக்களின் துன்பத்தை உலகறியச் செய்வதற்காக தனது மகன் தனது உயிரைத் தியாகம் செய்துள்ளதையிட்டு பெருமையடைவதாகக் கூறினார்.

ஜேம்ஸ் போலி அமெரிக்க குளோபல் போஸ்ட் ஏ.எப்.பி. உள்ளடங்களாக ஊடகங்களுக்காக மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top