மேஷம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் உற வினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை ஒன்று தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
மிதுனம்
மிதுனம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
கடகம்
கடகம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களை கட்டும். வாகனத்தை சரி செய் வீர்கள். வியா பாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். மகிழ்ச்சியான நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். தோற்றப் பொலிவு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.
கன்னி
கன்னி: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். இதை முதலில் முடிப்பதா, அதை முதலில் முடிப்பதா என்ற ஒரு டென்ஷன் இருக்கும். . பணப்பற்றாக் குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. முன்யோசனையுடன் செயல்பட வேண்டிய நாள்.
துலாம்
துலாம்: கணவன்-மனைவிக் குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். சகோதர வகை யில் சங்கடங்கள் வரும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வெளியூர் பயணங்கள் சிறப்பாக அமையும். சபைகளில் மதிக்கப் படுவீர்கள். வியாபாரத்தில் உங்கள் கொள்கைகளில் சில மாற்றம் செய்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.
தனுசு
தனுசு: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
மகரம்
மகரம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். கணவன்- மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.
கும்பம்
கும்பம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் கொஞ்சம் அலைச் சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். அநாவசிய மாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம்.வியாபாரத்தில் வெளிப்படையாக பேசுவது கூடாது என்பதை உணர்வீர்கள். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
மீனம்
மீனம்: பிள்ளைகள் குடும்பசூழ்நிலை அறிந்து செயல்படு வார்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.வாகன வசதிப் பெருகும். பிரபலங்களால் ஆதாயமடை வீர்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.