மேஷம்
மேஷம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. புது நட்பு மலரும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: இதமாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பெரிய நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.
மிதுனம்
மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகள் பெருகும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர் கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். கனவு நனவாகும் நாள்.
கடகம்
கடகம்: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப் பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.
சிம்மம்
சிம்மம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்
கன்னி
கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். சொந்த&பந்தங்களின் சுயரூபத்தை அறிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். மனநிறைவு கிட்டும் நாள்.
துலாம்
துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். யாரையும் தூக்கி எறிந்துப் பேசாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: குடும்பத்தின ருடன் வீண் வாக்குவாதங் களை தவிர்க்கப்பாருங்கள். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வெளி வட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பாராத பயணம் உண்டு. யாருக்கா கவும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். போராடி வெல்லும் நாள்.
தனுசு
தனுசு: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பொதுக் காரியங் களில் ஈடுபடுவீர்கள். சொந்த&பந்தங்கள் தேடி வருவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர் களாவார்கள். சிறப்பான நாள்.
மகரம்
மகரம்: கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியா பாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். சாதித்துக் காட்டும் நாள்.
கும்பம்
கும்பம்: குடும்பத்தில் இருந்த கூச்சல், குழப்பம் விலகும். எதிர்பார்த்த பணம் வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
மீனம்
மீனம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுபூர்வ மாக முடிவெடுக்கப்பாருங் கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். மற்றவர்கள் பிரச்னை யில் தலையிடுவதால் வீண் பழிச் சொல் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
Post a Comment