விண்டோஸ் 9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள், பல்வேறு ஊடகங்கள் வழியாகக் கசிந்து கொண்டுள்ளன. விண்டோஸ் 8, தொழில்
நுட்ப ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், மக்களின் பழகிப்போன செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக இருந்ததால், அவ்வளவாக எடுபடவில்லை. தோல்வியையே சந்தித்ததால், மக்கள் ஏமாற்றமடைந்த பல விஷயங்களை, வரும் விண்டோஸ் 9 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்துவிட முடிவெடுத்துள்ளது.
Threshold என்ற குறியீட்டுப் பெயருடன், விண்டோஸ் 9 வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதலாவதாக Charms Bar நீக்கப்படும் என்று தெரிகிறது. வாடிக்கையாளர்களில் பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கும் Start menu தரப்பட உள்ளது. விண்டோஸ் அப்ளிகேஷன் புரோகிராம்களுடன், மெட்ரோ அப்ளிகேஷன்களும் டெஸ்க்டாப்பில் காட்டப்படும். இரண்டும் இயங்கும். நிச்சயமாக, வாடிக்கையாளர்களின் மிகப் பிரியமான இயக்க முறைமையாக இது இருக்கும் என தெரிகிறது.
ஆனால், சார்ம்ஸ் பார் இயக்கம், டேப்ளட் பி.சி.க்களில் விரும்பப்ப் படுவதால், அதற்கான இயக்கத்தில் சார்ம்ஸ் பார் தொடரும். எனவே, பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 9, மக்களின் விருப்பங்களுக்கேற்ப செயல்படும் ஒரு சிஸ்டமாக அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. விண்டோஸ் 9 சிஸ்டம், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அம்சங்களைக் காட்டிலும், விண்டோஸ்7 அம்சங்கள் அதிகம் கொண்டதாக அமையலாம்.
புதிய முயற்சியாக, விண்டோஸ் 9 சிஸ்டத்தில், விர்ச்சுவல் டெஸ்க்டாப் (virtual desktop) அமைத்து இயக்குவதற்கான வசதிகள் தரப்பட இருக்கின்றன. தற்சமயம், மேக் ஓ.எஸ். மற்றும் உபுண்டு இயக்கங்களில் இந்த வசதி கிடைக்கிறது.
விர்ச்சுவல் டெஸ்க்டாப் மூலம், நாம் வெவ்வேறு வகையிலான டெஸ்க்டாப்களை உருவாக்கலாம். இவை முற்றிலும் மாறுபட்ட சூழ்நிலைகளைக் கொண்டிருக்கலாம். இரண்டிலும் மாறி மாறி இயங்கலாம். எடுத்துக் காட்டாக, ஒரு டெஸ்க்டாப்பில் உங்கள் நிறுவனப் பணிகளுக்கான அப்ளிகேஷன்களை வைத்து இயக்கலாம்.
இன்னொன்றில், நீங்கள் விளையாடும் கேம்ஸ் மற்றும் பெர்சனல் விஷயங்களுக்கானதாக அமைத்துக் கொள்ளலாம்.
இதிலிருந்து, டேப்ளட் பி.சி.க்களில் நன்றாக இயங்கிய சிஸ்டத்தினை, பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும் விரும்பி இயக்கப்படும் என மைக்ரோசாப்ட் எண்ணி, விண்டோஸ் 8 கொண்டு வந்த்து தவறு என அது உணர்ந்து, தற்போது நிலைமையை மாற்றி, புதிய விண்டோஸ் 9 சிஸ்டத்தில் கொண்டு வரத் திட்டமிடுவது தெரிகிறது.
விரைவில் விண்டோஸ் 9 இயக்கத்தின் சோதனை பதிப்பு வெளியிடப்படலாம் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

Post a Comment