Latest News

0
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டனிடம் பணியாற்றிய இந்திய செவிலியப் பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளவரசி கேட்டிடம், இந்தியாவின் கர்நாடக (Karnataka) மாநிலம் மங்களூரை (Manglore) சேர்ந்த ஜெசிந்தா சால்தான்ஹா (Jacintha Saldanha age-46) என்ற செவிலியப் பெண் பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் இளவரசி கேட் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அப்போது ஜெசிந்தாவிடம் தொலைபேசியில் ஆள்மாறாட்டம் செய்து, அவுஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னியில் (Sydney) உள்ள வானொலி நிலையம் ஒன்று தகவல்களை சேகரித்து ஒலிப்பரப்பியுள்ளது.
அதே வேளையில் ஜெசிந்தா மர்மமான முறையில் மரணமடைந்ததால், அதற்கு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பே காரணமாக அமைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்நிலையில் அந்த வானொலி நிலையத்தின் குறும்புத்தனமான செய்தி சேகரிப்பிற்காக, ஜெசிந்தா பலியான தகவல் உலகம் முழுவதும் உள்ள மனிதநேய ஆர்வலர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
மேலும் அவரது மர்ம மரணம் தொடர்பாக நடந்து வந்த விசாரணையில், ஜெசிந்தா தற்கொலை செய்துகொண்டு இறந்துப் போனது நேற்று உறுதிபடுத்தப்பட்டது.
இதனையடுத்து ஜெசிந்தா குடும்பத்தாருக்கு 5 லட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதாக அந்த வானொலி நிலையம் இன்று அறிவித்துள்ளது.



Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top