Latest News

0
நடிகையுடன் தகாத உறவு வைத்திருந்த தனது கணவரும் முன்னாள் பிரான்ஸ் அதிபருமான Francois Hollande அவர்களுடன் தான் சண்டை போட்டதாகவும், இதுகுறித்து நடந்த மோதல் காரணமாக தான் தற்கொலைக்கு முயன்றதாகவும், ஹோலண்டா மனைவி Valerie Trierweiler கூறியுள்ளார்.

Valerie Trierweiler எழுதிய சுயசரிதை புத்தகமான Thank You for the Moment என்ற புத்தகம் நேற்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் வெளியானது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய Valerie Trierweiler, " ஒரு பத்திரிகையாளராக என்னால் எனது கணவர் ஒரு நடிகையுடன் தகாத உறவு வைத்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. படுக்கையறையில் அவருடன் சண்டை போட்டேன். அதன்பின்னர் கோபத்துடன் நான் தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்கு சென்றேன். என் பின்னால் வந்து எனது கணவர் என்னை தடுத்தார். அன்று அவர் தடுக்காவிட்டால் தற்கொலை செய்திருப்பேன் என்று கூறினார். ஆனால் முன்னாள் பிரான்ஸ் அதிபர் Hollande அலுவலகம் இந்த தகவலை மறுத்துள்ளது. புத்தகம் பரபரப்பாக விற்பனை ஆகவேண்டும் என்பதற்காக நடக்காத ஒன்றை Valerie Trierweiler கூறுவதாக தெரிவித்துள்ளது.

Valerie Trierweiler அவர்கள் எழுதிய புத்தகம் இன்று உலகம் முழுவதும் விற்பனைக்கு வருகிறது. பிரான்ஸ் நாட்டில் இந்த புத்தகத்தை வாங்க ஆயிரக்கணக்கானோர் முன்கூட்டியே பதிவு செய்து வைத்துள்ளனர். ஏற்கனவே Francois Hollande கருத்துக்கணிப்பில் மோசமான நிலையில் இருக்கின்றார். இந்த புத்தகம் வெளியான பின்னர் அவருடைய இமேஜ் பிரான்ஸ் நாட்டு மக்களின் மத்தியில் பெருமளவு பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top