அமெரிக்காவில் உள்ள நியூமெக்சிகோ மாகாணத்தை சேர்ந்த ஜாக் ஜோர்டான் என்ற 62 வயது சமீபத்தில் விமான பயணம் செய்தபோது திடீரென மாரடைப்பு வந்ததால் கடும் அவதிக்குள்ளானார். இதனால் விமானத்தில் இருந்த நர்ஸை அழைத்து தனக்கு முதலுதவி செய்யும்படி கேட்டுக்கொண்டார். பொதுவாக விமானப்பயணத்தின்போது மாரடைப்பு வந்தால் அதிர்வு கருவி என்ற கருவியை மார்புக்கு நேராக வைத்து முதலுதவி செய்வர். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழக்கம் உண்டு. அதுபோல அதிர்வு கருவி என்ற கருவியை எடுத்து வந்த பெண் நர்ஸ் ஒருவர் அவரது மார்பில் அதிக முடி இருந்ததால் அதிர்வு கருவி ஐ பயன்படுத்த மறுத்துவிட்டார். அவருக்கு முதலுதவி செய்யாததால் சிறிது நேரத்தில் ஜாக் ஜோர்டான் பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த விமான நிறுவன மருத்துவ அதிகாரி டாக்டர் பாரி ramo அவர்கள் கூறும்போது, "மாரடைப்பு வந்த பயணிக்கு உடனடியாக மார்பில் இருந்த முடியை ஷேவ் செய்துவிட்டு அதிர்வு கருவி கருவியை பயன்படுத்தியிருக்க வேண்டும் என்றும் இது முழுக்க முழுக்க நர்ஸின் கவனக்குறைவுதான் என்று கூறியதோடு பலியான பயணியின் குடும்பத்திற்கு தங்கள் ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும் சம்பந்தப்பட்ட நர்ஸ் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.