மலேசிய அரசுக்கு சொந்தமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்கள் சமீபகாலமாக பல்வேறு கோளாறுகளையும், அவைசார்ந்த சிக்கல்களையும் சந்தித்து வருகின்றன. 239 பயணிகளுடன் சீனா செல்லும் வழியில் கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி மாயமாகிப் போன மலேசிய விமானம் தொடர்பான பரபரப்பான சர்ச்சைக்கு இன்னும் சரியான விடை தெரியாத நிலையில், மலேசியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான மற்றொரு விமானம் கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி உக்ரைன் அருகே ஏவுகணை தாக்குதலில் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த தாக்குதலில் அந்த விமானத்தில் சென்ற 289 பயணிகளும் உடல் கருகி பலியாகினர்.
இது தவிர, மேலும் சில விமானங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதாக தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கும் செய்திகள், பயணிகளின் வயிற்றில் புளியை கரைப்பதால், மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களில் பறப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால், சர்வதேச பங்குச் சந்தையில் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களின் பங்குகள் வெகுவாக சரிந்தன. இதனையடுத்து, அந்நிறுவனம் ஆள்குறைப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டிய நிர்பந்தமும் ஏற்பட்டது.
இந்நிலையில், இந்தியாவில் உள்ள ஐதராபாத் நகருக்கு செல்ல வேண்டிய மலேசியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான தடம் எண் MH198 கொண்ட போயிங் 737-800 ரக விமானம் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து அந்நாட்டின் உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 10.20 மணிக்கு புறப்பட்டது.
ஆனால், சுமார் பாதி தூரம் பறந்த பின்னர் விமானத்தின் ‘ஆட்டோ பைலட்’ (விமானியின் இயக்கம் இன்றி, தானியங்கி முறையில், தாமாகவே நிலையாக பறப்பது) வசதி வேலை செய்யாததால், மலேசியாவுக்கே திரும்பிய அந்த விமானம் இன்று அதிகாலை 2 மணியளவில் கோலாலம்பூர் விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதற்கிடையே, அந்த விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதனால் அந்த விமானம் அவசரமாக கோலாலம்பூருக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள், இன்று நண்பகல் 12 மணியளவில் அதே விமானம் ஐதராபாத்துக்குப் புறப்பட்டு செல்லும் என்று தெரிவித்துள்ளனர்.
Flight back to Malaysia! The fate of the middle way ...
Due to various problems for the Malaysian state-owned Malaysian Airlines, avaicarnta issues have been met. On the way to China with 239 passengers on March 8 mayamakip exciting controversy related to the departure of the flight to Malaysia still do not know the correct answer, Malaysian Airlines plane was owned by another missile attack near the Ukraine, on the 17th of July downing.
In the attack on the plane carrying 289 passengers died in the body are corrupted.
In addition, disorders occur more frequently in some of the following aircraft approaching the messages, in the belly of passenger by dissolving tamarind, Malaysian Airlines is reportedly greatly reduced the number of flights parappor.
Thus, the international stock market fell dramatically in the shares of Malaysia Airlines flights. Subsequently, the company was downsizing measures of coercion to go on.
In this case, to go to the city of Hyderabad in India, owned by Malaysian Airlines Boeing 737-800 aircraft with track number MH198 Malaysian capital Kuala Lumpur last night at 10.20 pm local time, set sail from the country.
However, the plane was flying at about half the distance of the 'auto-pilot' (without the pilot's movement, in automatic mode, position themselves elated) feature does not work, maleciyavukke returned this morning at 2 am, the plane landed at the Kuala Lumpur airport.
Meanwhile, a fire occurred in the plane, so the plane was returning to Kuala Lumpur in a hurry to spread information on social websites. Company officials have denied this, Malaysian Airlines, today, noon to 12 pm on the same flight that departed aitarapattukkup said.
Post a Comment