0
உளுந்தூர்பேட்டை அருகே சாலையில் கிடந்த பைக்  மீது மோதி ஆம்னி பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் 10 பயணிகள்  லேசான காயமடைத்துடன் உயிர் தப்பினர். சென்னையில் இருந்து நேற்று  முன்தினம் இரவு கேரள மாநிலம் மூணாறுக்கு ஆம்னி பேருந்து புறப்பட்டு  சென்றது. பேருந்தில் 35க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.  மூணாறை சேர்ந்த முருகன்(36) என்பவர் பேருந்தை ஓட்டி சென்றார்  நள்ளிரவு உளுந்தூர்பேட்டை அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில்  ஆசனூர் சிட்கோ எதிரில் பேருந்து வந்தது. அப்போது பைக் விபத்தில்  சிக்கி ஒருவர் சாலையோரம் படுகாயத்துடன் கிடந்த நிலையில் அவர்  ஓட்டி வந்த பைக் நடு ரோட்டில் கிடந்துள்ளது. இந்த பைக்கின் மீது  பேருந்து எதிர்பாராதவிதமாக மோதி இழுத்து சென்றது. அந்த சமயத்தில்  பைக்கில் இருந்த பெட்ரோல் வெளியேறி தீப்பிடித்து எரிந்தது. இதில்  பேருந்து தீப்பிடித்து முன்பக்க டயர் வெடித்து சிதறியது. மேலும்  பேருந்தில் தீ வேகமாக பரவி எரிய தொடங்கியது. இதனை அறிந்த  ஓட்டுனர் உள்ளிட்ட அனைத்து பயணிகளும் கதவு மற்றும்  கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு பேருந்தில் இருந்து குதித்து  வெளியேறினர்.

தொடர்ந்து பேருந்து மள, மளவென தீப்பிடித்து எரிந்தது. இதனை அறிந்த  ஆசனூர் சிட்கோ பகுதியில் இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  ஊழியர்கள் மற்றும் தீ தடுப்பு அதிகாரிகள் விரைந்து வந்து தீ தடுப்பு  நடவடிக்கையில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு மற்றும்  காவல்நிலையங்களுக்கு தகவல் தெரிவித்தனர். உளுந்தூர்பேட்டை மற்றும்  வேப்பூர் பகுதியில் இருந்து வந்த 2 தீயணைப்பு வாகனங்களில் வந்த  15க்கும் மேற்பட்ட வீரர்கள் சுமார் 1 மணி நேரம் போராடி தீயை  அணைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு கடும் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது. காயம் அடைந்த 10க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு  உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.  தொடர்ந்து கிரேன் மூலம் எரிந்து எலும்பு கூடாக இருந்த ஆம்னி பேருந்து  அப்புறப்படுத்தப்பட்டு போக்குவரத்து சரிசெய்யப்பட்டது.



Lunturpettai lying in the road near the fire burned on the bike and hitting the Omni bus. Of the 10 passengers survived with mild kayamatait. Wednesday night from Chennai to Kerala State munar Omni bus left. More than 35 passengers were traveling in the bus. Munarai the Murugan (36), a bus drove Trichy national highway near midnight Ulundurpet acanur the bus came against Citgo. And, having had a severe burn injuries in an accident with the bike in the middle of the road as he drove kitantullatu the bike. Unfortunately, hitting the bike on the bus dragged. The bike was at the time the gasoline burned in a fire exit. The bus caught fire on the front tire exploded. The fire lit up the bus began to spread more rapidly. Knowing this, all passengers, including the driver jumped from the bus and walked out the door and the glass broke.

Largely following the bus, malavena burned in a fire. Knowing this, the Indian Oil Corporation in acanur Citgo employees were on fire prevention and fire prevention officers rushed. After the fire and police stations, according to the information. Ulundurpet and veppur area from 2 to 15 players over the fire for about 1 hour to control the blaze. The impact of this incident, there was heavy traffic. More than 10 passengers were injured in Ulundurpet Government Hospital for treatment. Omni bus was burned skeleton followed by the crane repaired அப்புறப்படுத்தப்பட்டு traffic.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top