Latest News

0

மேஷம்
மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் ஒன்றாகவும், நடப்பது வேறொன்றா கவும் இருக்கும் நீங்கள் பார்க்க நினைத்த முக்கிய நபரை சரியான நேரத்திற்கு சந்திக்க முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களை தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். போராட்டமான நாள்.

ரிஷபம்
ரிஷபம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மதிக்கப்படுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.

மிதுனம்
மிதுனம்: குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரி உதவுவார். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.

கடகம்
கடகம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உறவினர் கள் வீடு தேடி வருவார் கள். திடீரென்று அறிமுக மாகுபவரால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை இதமாகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். கனவு நனவாகும் நாள்.


சிம்மம்
சிம்மம்: பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் திருப்திகரமான சூழ்நிலை உருவாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.


கன்னி
கன்னி: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். பிரபலங்கள் அறிமுக மாவார்கள். சொந்த-பந்தங் களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். வெற்றி பெறும் நாள்.


துலாம்
துலாம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். மகிழ்ச்சியான நாள். 


விருச்சிகம்
விருச்சிகம்:  ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலைகளையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். பிள்ளைகளிடம் கோபத்தை காட்டாதீர்கள். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.


தனுசு
தனுசு: மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான் மையும் வந்து நீங்கும். உறவினர், நண்பர்களில் சிலர் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.

மகரம்
மகரம்: நீண்ட நாள் ஆசை நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.

கும்பம்
கும்பம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர், நண்பர்களால் அனுகூலம் உண்டு. சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணர்வீர் கள். முயற்சியால் முன்னேறும் நாள்.

மீனம்
மீனம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். நிம்மதியான நாள்.

Post a Comment

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

News

 
Top