மேஷம்: பேச்சை குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பெருமைகளை மற்றவர் களிடம் சொல்லி மகிழ்வீர் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மிக நாட்டம் அதிகரிக் கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவு கிட்டும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.
மிதுனம்
மிதுனம்: மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் நினைத்த வேகத் தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சொன்ன சொல்லை காப்பாற்ற வேண்டுமே என்ற பயம் வரும். யாரை நம்புவது என்கிற மனக்குழப்பத்திற்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். கடின உழைப்பால் முன்னேறும் நாள்.
கடகம்
கடகம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். பயணங்கள் சிறப்பாக அமையும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். மாலை 6.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.
சிம்மம்
சிம்மம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர் களின் வருகையால் வீட்டில் உற்சாகம் தங்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். அமோகமான நாள்.
கன்னி
கன்னி: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறை வேறும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தல் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.
துலாம்
துலாம்: பழைய நல்ல சம்பவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.
விருச்சிகம்
விருச்சிகம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்த வர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டு வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். விவாதங்களில் வெற்றி பெறும் நாள்.
s
தனுசு
தனுசு: கணவன்மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். தாழ்வுமனப்பான்மை நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். எதிர் பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உற்சாகமான நாள்.
மகரம்
மகரம்: மாலை 6.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந் தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துப் போகும். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள். உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளா தீர்கள். சகிப்புத் தன்மையால் சங்கடங்கள் தீரும் நாள்.
கும்பம்
கும்பம்: எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். மாலை 6.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் பொறுமை தேவைப்படும் நாள்.
மீனம்
மீனம்: எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடன் பிறந்தவர்கள் உறுதுணை யாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அனுபவ அறிவால் வெற்றி பெறும் நாள்.
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.