0
கோவை மருத்துவமனையில் கருதரிப்பதற்காக சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்தவர் சலுவுக்சாவுத். இவர் கோவையில் தங்க நகை பட்டறை நடத்தி வருகிறார். இவரது மனைவி சுஜாதாசாவுத்.

இத்தம்பதியினருக்கு திருமணமாகி 7 வருடங்களாகியும் குழந்தை பிறக்காததால் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மருத்துவமனைக்கு சென்ற சுஜாதாவிற்கு கருத்தரிப்பு ஊசி போடப்பட்டுள்ளது.

இதன்பின் வீடு திரும்பிய சுஜாதாவிற்கு நள்ளிரவில் வலிப்பு வந்துள்ளது. உடனடியாக அவர் அதே தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

அங்கு இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் அவரது கணவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

ஆனால் செல்லும் வழியிலேயே சுஜாதா சாவுத் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து சுஜாதாவுக்கு மருத்துவம் செய்த தனியார் மருத்துவமனையின் மேல் அவரது கணவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.

தற்போது இவ்விடயம் தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top