0
இலங்கை அணியிடம் தொடரை பறிகொடுத்த பாகிஸ்தான் அணிக்கு எதிர்வரும் உலகக்கிண்ண போட்டிகள் கேள்விக்குறியாக அமைந்து விட்டதாக முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தான் அணி இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் டெஸ்ட் தொடரில் 2-0 என்ற நிலையில் தோற்ற பாகிஸ்தான், ஒருநாள் போட்டியிலும் 2-1 என்ற கணக்கில் தொடரை பறிகொடுத்தது.

அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக்கிண்ண போட்டிகளுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், இந்த தோல்விகள் உலகக்கிண்ண போட்டிகளை பாதிக்கும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது பற்றி முன்னாள் அணித்தலைவர் முகமது யூசுப் கூறுகையில், தற்போது அணித்தலைவராக உள்ள மிஸ்பா-உல்-ஹக் உலகக்கிண்ண போட்டிகளுக்கு சிறந்த அணித்தலைவராக இருப்பார் என்ற நம்பிக்கை இல்லை.

அவரிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. உலகக்கிண்ண போட்டிகளில் அப்ரிடி சிறந்த அணித்தலைவராக இருப்பார் என்பது என்னுடைய தீர்வாக உள்ளது என்று கூறியுள்ளார்.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top