0
ஜிம்பாப்வே, அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் ஹராரேயில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் நேற்று மோதின.

இந்தப் போட்டியில் 31 வருடங்களுக்கு பின் அவுஸ்திரேலியாவை வெற்றி கொண்ட ஜிம்பாப்வே அணி சாதனை படைத்துள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி களமிறங்கிய அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் திணறினர்.

இதன்படி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 209 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக பொறுப்பாக விளையாடிய அணித்தலைவர் மைக்கல் கிளார்க் அதிகப்படியாக 68 ஓட்டங்களைப் பெற்றார்.

வெற்றிக்கு 210 ஓட்டங்கள் தேவை என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக மாவோயோ, ராசா களமிறங்கினார்.

இருவரும் அவுஸ்திரேலிய தொடக்க வீரர்கள் பந்துகளை சந்திக்க திணறியது போலவே திணறினார்கள்.

போட்டியின் 12வது ஓவரில் 22 ஓட்டங்களில் ராசா ஆட்டமிழக்க மசக்கட்சா களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே மாவோயோ 15 ஓட்டங்களில் அவுட்டாக டெய்லர் களமிறங்கினார்.

டெய்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மஸ்கட்சா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அணியின் ஓட்டங்கள் 100 ஆக இருந்தபோது மஸ்கட்சா ஆட்டமிழக்க வாலர் களமிறங்கினார். சிறிது நேரத்திலேயே டெய்லரும் 32 ஓட்டங்களில் நடையை கட்ட வில்லியம்ஸ் களமிறங்கினார்.

வந்த வேகத்திலேயே வில்லியம்ஸ் பெவிலியன் திரும்ப அணித்தலைவர் சிகும்புரா களமிறங்கினார்.

ஆரம்பம் முதலே சிகும்புரா அடித்து ஆடத் தொடங்கிய நிலையில் வாலரும் 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பின்னர் உட்சேயா, சிகும்புராவுடன் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் அதிரடியாக ஆடி 31 ஆண்டுகளுக்கு பின் முதன்முறையாக அவுஸ்திரேலிய அணியை தங்கள் அணி வீழ்த்த காரணமாக இருந்தனர்.

இறுதியில் 48வது ஓவரிலேயே 7 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் குவித்து ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றது.

52 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜிம்பாப்வே அணியின் அணித்தலைவர் சிகும்புரா ஆட்டநாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.







Zimbabwe, Australian and South African teams participating in the tri-series has been taking place in Harare.
The fourth match of the series in the Australian and Zimbabwean teams played yesterday.

After 31 years of success in this competition avustireliyavai Zimbabwe team record.

Currency in circulation since winning the Australian team decided tutuppetuttata.

Accordingly, Australian cricket players entering the dust in the face of Zimbabwe bowler.

Accordingly, the loss of nine wickets in the stipulated 50 overs scored 209 runs only.

Australian captain Michael Clarke has played on behalf of the team responsible for a maximum of 68 earned runs.

Need 210 runs to win, with the goal of entering Zimbabwe. For beginner players mavoyo, Raja bang.

Australian opener as both players struggled simply could meet balls.

Raja dismissals in 22 runs in the 12th over of the match with a bang macakkatca. Barely out of mavoyo Taylor made ​​15 runs.

Action game maskatca reveal Taylor revealed moderate game.

The team's score of 100 was a bang maskatca Waller dismissals. Barely Taylor Williams made ​​32 runs, ending in a tie.

Williams, at the Pavilion captain Chigumbura came back with a bang.

Chigumbura had begun to move away from the beginning of valarum 11 runs scored. After Utseya, Chigumbura joined the pair.

Both the Audi Action after 31 years were the first Australian team to bring down their team.

211 runs for the loss of 7 wickets at the end of the 48th ovarileye amassed Zimbabwe team won.

Amassed 52 runs were scored until the last Zimbabwe captain Chigumbura was adjudged Man of the Match.

Post a Comment

[News][horizontal][animated][7]

 
Top